November 21, 2024

அரசியல் ஆய்வுக்கம் 2020 பற்றி அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ் அவர்களின் பார்வை

வணக்கம் 2020 அரசியல் ஆய்வுக்களம் பார்த்தேன் நேர்காணல் கண்ட STS தேவராசா, கருத்துக்களை பகிர்ந்த முல்லை மோகன் இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்,

எமதுசிலபதிவு சிலகால அரசியல் நிலவரங்கள் கொரோனாவைவிட கொடூரமாக செல்கிறது நமதுநாட்டு அரசியல் பேச்சில் கருத்தில் அன்பு இருந்தாலும் நடைமுறை அப்படியல்ல அவர்கள் மக்களுக்காக செயல்ப்படுகிறார்களா அல்லது தமதுகட்சிகளை பலப்படுத்தவே பாடுபடுகிறார்களா மக்களுக்காக ஆளும்கட்சியோ எதிர்க்கட்சியோ ஏன்சிலதமிழ்கட்சியில் உள்ள சிலர் செயல்ப்படுகிறார்களா என்றால் கேள்விக்குறியாக உள்ளது.

இப்போது எங்கும் ஜாதிமத ரீதியாக அரசியல் நடப்பதுபோல் இருக்கிறது இன்றைய அரசியலே சிலுவை இட்டால் கிறிஸ்தவமாம் ,திருநீறு இட்டால் இந்துக்களும் ,காவி இட்டால் பௌத்தம் என்பார் குல்லா இட்டால் இஸ்லாம் என்பார் ,மனிதம் எங்கே இருக்கிறது என்பது போல் அரசியல் நிலைப்பாடுகள் போர்ச்சூழலில் பலவற்றை நாம் இளந்தோம் மறந்தும் சிலவற்றை மறவாது இன்று ஜாதிமதங்களை பிரித்து பார்க்கும் அரசியலில் வாக்கு சேர்க்கும்போது நினைப்பதில்லையா ,

யாழ் அரசியல்கள நிலவரமும் நேற்று ஒருவர் இன்று ஒருவர் நாளைவேறு ஒருவர் தமிழரது ஒற்றுமை இன்மையின் காரணம் பிரித்தாளும் சதிகள் வெல்கிறது STS தேவராசாவின் இடைவிடாத கேள்விகள் முல்லை மோகனின் உறுதியான தடையில்லாத பதில்களும் வருங்காலங்களில் இந்தியர்களும் ஏன்சீனர்களும் தேர்தலில் போட்டியிட்டால் நாம் ஆச்சரியப்படுவதர்க்கு ஒன்றும் இல்லைப்போல் கொள்கைகள் இருக்கோ இல்லையோ ஆனால் கொடிகள் அதிகமாகவே வருகிறது சிறப்பான கருத்தாடல்களோடு STS தேவராசாவும் , அழகான விடைகளோடு முல்லைமோகனும் சிறப்பாக அரசியல் ஆய்வுக்களம் வலம்வந்தது வாழ்த்துக்கள் இதுபோன்ற நல்ல பதிவுகளை தொடருங்கள் நன்றி