November 13, 2024

யேர்மனியில் ஈழத்தமிழர்களில் முதல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவாளர் எஸ்.தேவராசா.

தாயகத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் பின் 1981 ஆண்டு யேர்மனிலியில் அரசியல் தஞ்சம்கூறி வாழ்ந்து வந்த இவர் கலைதனிலும் தொழில் நுட்பம்தனிலும் மிக ஈடுபாடுகொண்டவர் ,

ஒலிபரப்பாளரான இவர் யேர்மனியில் முதல் ஒளிப்பதிவு ஒலிப்பதித்துறையில் தன்பயணத்தை தொடர்ந்த எஸ்.தேவராசா தயாகத்தியேலே சிறுவயதில் இருந்த நாதன் சவுட்ண்டுடன் பயணிக்க தொடங்கி ஒலிபெருக்கி துறை அனுபவத்தால் அன்று பல ஆலய, களியாட்ட நிகழ்வுகளுக்கும், பல இசைக்குழுக்கள், வில்லுப்பாட்டுக்கலைஞர்களுக்கும் ஒலிப்பரப்பாளராக இருந்து வந்தார் ,

பின் 1981 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து யேர்மனிக்கு வந்து தன்னை வழமாக்கி ஒலிப்பதிவுடன் ஒளிப்பதிவாளராக இவர் தனது தனித்துவத்தில் ஒளிப்பதிவுகருவியை வாங்கி அதன்மூலம் தானாக கற்று முதல் முதல் ஒளிப்பதிவாக வூல்போர்கில் வாழ்ந்துவரும் திரு திருமதி சுந்தரலிங்கம் தம்பதிகளின் திருமணத்தின் மூலம் 01.09.1985 ஒளிப்பதிவாளர் தன்பயணத்தை தொடர்ந்து பயணித்துவருவதுடன் பின் தொழில் நுட்பத்திலும் தன்னை வழமாக்கி இன்று அவர் பயணம் STS தொலைக்காட்சியை ஏழாவது ஆண்டுவரை கொண்டு செல்வதுடன் பல ஆண்டுகளாக பல இணையத்தளங்களையும் நிர்வகித்துவருகின்றார் என்பது தமிழர்களுக்கு மிகச்சிறப்பாகும் இவர்கலைப்பயணம் தொடர வாழ்த்துவோம் ஈழவன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert