November 24, 2024

மன்னிக்க கோரும் மனோ:கருணாவோ சுற்றுலாவில்?


ஆயுள்தண்டனை கைதி சுமண தேரருக்கு இன்று வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு மற்றும் „ஒரே நாடு, ஒரே சட்டம்“ கொள்கை ஆகிய

பின்னணிகளில், தமிழ்கைதிகள் மீதும் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச கரிசனை கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகி ஆயள் தண்டனை பெற்ற பிக்குவே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே அரசியல் கைதிகள் பலரை உள்ளே தள்ளிய கருணா எனப்படும் முரளிதரன் வடக்கிற்கு சுற்றுலா புறப்பட்டுள்ளார்.

தேசிய கட்சிகளுடன் இன்றி, தமிழ்க் கட்சிகளுடனேயே வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களை சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைய தயாராக இருப்பதாகவும் கூறினார்.

கிளிநொச்சியில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

டக்ளஸ்,விசயகலா போன்றோரின் வழிநடத்தலில் செயற்பட்ட சகாதேவன் எனும் நபர் சகிதம் கருணா தனது பயணத்தை  மேற்கொண்டிருந்தார்.