திருந்த மாட்டோம்: மீண்டும் சேறடிக்கும் தரப்புக்கள்?
மீண்டும் ஜெனீவா அமர்வு ஆரம்பிக்க முன்னதாக செயற்பாட்டாளர்களை தாSet featured imageயகத்தில் முடக்கி அதற்கு ஏகபோக கொந்தராத்து எடுக்க புறப்;பட்டுள்ளன சில தரப்புக்கள்
இ;ன்று எழுதிக்கொடுக்கப்பட்ட அறிக்கை சகிதம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி என்பவர் பேரில் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கை சேர்ந்த செயற்பாட்டாளர்கள் குழுவொன்று ஜெனீவா அமர்வு பிரேரணையொன்றிற்கு தயாராகிவரும் நிலையில் அவர்களை முடக்க சதி வகுக்கப்படுகின்றதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அழிப்புக்குற்றங்கள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் ,போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரசை அனைத்துலக விசாரணையில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையில் இரு நாட்டு உளவுத்துறையின் பின்னணியில் முக்கிய செயற்பாட்டளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளதாக அம்மணி பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தியுள்ளார்.
அனைத்துலக ரீதியில் இலங்கையின் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தற்போது பேசுபொருளாக பார்க்கப்படுவதாலும் ,ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற இருப்பதாலும் இதற்கான பின்னணிப் பணிகளை இந்தியா சிறீலங்கா உளவுத்துறை மேற்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது .
நீதி கோரல் விடையத்திற்கு சுமந்திரனை மீண்டும் கையாண்டு ராஜபக்ச அரசினை காப்பாற்றும் முயற்சியில் அணி ஒன்று களம் இறங்கியுள்ளது.
அந்த பட்டியலில் பிரதானமாக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் அடங்குகின்றனர்
நீதி கோரல் தொடர்பில் சுமந்திரன் கொண்டுவந்த தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களாலும் சில அரசியல் தலைவர்களாலும் நிராகரிக்கப்பட்டு அவரின் தலையீடு நிறுத்தப்பட்டு முறியடிக்கப்பட்டது
இந்த நிலையில் மீண்டும் மறு வடிவத்தில் உளவுத்துறையின் நிகழ்ச்சியில் சுமந்திரனை மீண்டும் கொண்டுவந்து பாதிக்கப்பட்ட மக்களை திசை திருப்பி சிங்கள அரசினை காப்பாற்ற முயன்றுள்ளர்.
கூட்டமைப்பை தடை செய்யும் அளவிற்கு கூட்டமைப்பு என்ன சாதனை செய்தது என்பது யாவரும் அறிந்ததே
இது இந்திய இலங்கை உளவுத்துறையின் நிகழ்ச்சிநிரலாகும் இவ்வாறான நிகழ்ச்சி நிரலுக்கு பலம்வழங்கும் வகையில் சிவகரன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்திய உளவுத்துறைக்கு வேலை செய்யும் சில நபர்களே சிவகரனை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறு சுமந்திரனை ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்ட மக்கள் விடையத்தில் களம் இறக்கி சிறீலங்கா அரசினை காப்பாற்ற வேண்டும் என்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த நல்லாட்சி காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விருப்பங்கள் கேட்டறியப்படாமல் உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களது சம்மதம் இல்லாமல் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் திறக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகளானது மேற்படி காணாமல் ஆக்கப்பட்டமைக்கு பொறுப்பு கூறும் கடப்பாட்டில் இருந்து தப்பித்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு உள்ளக விசாரணைகளுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியவர்களும் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் திறக்கப்படுவதை நியாயப்படுத்தியவர்களும் எப்போதும் மறைமுகமாக தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் இந்த ஆட்சியாளர்களுக்கு உண்டு. எனவே அரசு தாம் செய்த குற்றங்களுக்கு தம்மை தாமே தண்டிக்க போவதில்லை. எனவே சர்வதேச பக்கசார்பற்ற விசாரணை ஒன்றின் மூலமாகவே எமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் யாழ்ப்பாணத்தில் போட்டி பேரணி நடத்தி மூக்குடைபட்ட தரப்பின் பின்னணியில் ஊடக சந்திப்பு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.