November 21, 2024

இராமர் பாலம் உண்மையே?

தமிழ்நாட்டை ஒட்டியுள்ள இராமர் பாலத்தின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கிவிட்ட போதும், இலங்கையை ஒட்டியுள்ள இராமர் பாலத்தின் சில பகுதிகள் இன்றும் கடல் மட்டத்தின் மேல் சிறு தீவுகளாக உள்ளன. இந்த தீவுகளை கூகிள் செயற்கைகோள் வரைபடத்தில் தெளிவாக காணமுடியும். இந்த தீவுகளுக்கு முதல் தீவு (1st island), இரண்டாவது தீவு (2nd island), பறவை தீவு (bird island), நான்காவது தீவு (4th island), ஐந்தாவது தீவு (5th island), ஆறாவது தீவு (6th island) என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஆக, தீவு என ஒப்புக்கொள்ளும் அளவிலான 6 நிலப்பரப்புகள் இன்றும் இராமர் பாலத்தின் எஞ்சிய அடையாளங்களாக உள்ளன.

இராமர் பாலம் இருந்தது என்று கூறுவதைவிட, இப்போதும் அந்த பாலத்தின் சில பகுதிகள் காலத்தால் அழியாது கடல்மட்டத்திற்கு மேல் உள்ளன என்று கூறுவதே சரியாக இருக்கும். இந்த பாலம் இயற்கையான மணல் திட்டு அல்ல. மாறாக, மனிதர்களால் சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்ற உண்மையை தற்கால அறிவியலும் நிறுவியுள்ளது.

நம் முன்னோர்கள், இராமர் பாலம் உட்பட பல அரிய தகவல்களை நமக்காக நூல்கள் பலவற்றில் பதிவு செய்து சென்றுள்ளனர் என்பதை முதலில் நாம் உணரவேண்டும். நமக்கிருக்கும் இதிகாசங்களும், புராணங்களும், இலக்கியங்களும் உலகிலுள்ள பிற பகுதிகளில் கிடையாது. கண்மூடிதனமாக „அனைத்தும் கற்பனையே“ என்று ஒரே வாக்கியத்தில் கூறுவதை விடுத்து, பகுத்து அறிய முற்பட்டோமேயானால், நம் முன்னோர்கள் பற்றி நமக்கு தெரியாத பல அரிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும்