November 21, 2024

இலங்கை : 60 % வீதமான நிறுவனங்கள் தோல்வி?

 

இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள  ‘நிதி மேலாண்மை அறிக்கையின் படி (Fiscal Management Report 2020–21) , அரசுக்கு சொந்தமான 52 நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல்  8 மாதங்களில் பெரு நட்டமடைந்து உள்ளன. அதாவது இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான 60 % வீதமான நிறுவனங்கள் தோல்வியடைந்து இருக்கின்றன

குறிப்பாக அரச நிறுவனங்கள் மட்டும்  முதல் 8 மாத காலப்பகுதியில்  10,447 மில்லியன் ரூபா நட்டமடைந்து இருக்கின்றன

அந்த வகையில் இலங்கை மின்சார சபை , இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இலங்கை போக்குவரத்து சபை , இலங்கை Airlines, சதோசா , அரச பொறியியல் கழகம், HDFC  வங்கி மற்றும் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனங்களான  ரூபாவாஹினி மற்றும் ITN ஆகிய நிறுவனங்கள்  பெரும் நட்டத்தை அடைந்த  நிறுவனங்களின்  பட்டியலில் அடங்கி இருக்கின்றன

ராஜபக்சே குடும்பம் ஆட்சிக்கு வந்த பின்னர் ராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்கமான கலிபோர்னியா வாழ் நண்பர்கள், ராஜபக்சே குடும்ப உறவினர்கள் , இராணுவ அதிகாரிகள் என ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த பலர் அரச நிறுவனங்களின்  பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர் .  கல்வி தகமை, தொழில் தகமை , அனுபவம் என அடிப்படை  விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் தனிப்பட்ட இலக்குகளை முன் நிறுத்தி நியமனங்கள் செய்யப்பட்டன. இவ்வாறு தகுதியற்றவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட நிறுவனங்கள் வெறும் 8 மாதங்களில் பாரிய இழப்பை சந்தித்து இருக்கின்றன .