November 22, 2024

பொதுஜனபெரமுன-சுதந்திரக்கட்சி தெறிப்பு?

 

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் முறிவடைந்துள்ள நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச, கண்டியில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன கூட்டணியாக பல ஒப்பந்தங்களின் கீழ் இணக்கம் காணப்பட்ட கொள்கைகளுக்கு முரணான வகையில் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை தோல்வியடைந்துள்ளதாகவும் ரோஹண லக்ஷமன் பியதாச  கூறியுள்ளார்.

அதேநேரம், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் எந்தவொரு கலந்துரையாடலும் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.