März 28, 2025

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த தாதி!

மட்டக்களப்பில் நேற்றிரவு (22.12.20) மாமரத்தில் தொங்கிய வௌவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, எதிர்வீட்டில் இருந்த தாதியின் மீது குண்டு பட்டு

படுகாயமடைந்துள்ளார்.இத் துப்பாக்கி சூட்டில் பூம்புகார், கண்ணகியம்மன் வீதி 3 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தலைமை தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் 55 வயதுடைய நடராஜா ராதா என்பவரே படுகாயமடைந்துள்ள நிலையில் அவசர சிகிற்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார். காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர் வைத்திருந்த துப்பாக்கியும் பறிமுதல்  செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.