வெள்ளை மாளிகைக்குள் பைடனுக்கு அனுமதியில்லை!
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை இன்னும் ஒத்துக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், பைடனை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க முடியாது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.
கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.
ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.
ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுப்படி செய்யப்பட்டன.
306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்த தேர்தல் சபை கூட்டத்திலும் பைடன் அதிபராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.
இந்நிலையில் ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க முடியாது என்றும், வெள்ளை மாளிகையிலிருந்து நான் வெளியேறும் நாளையும் நானே முடிவெடுப்பேன் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.