November 22, 2024

கொரோனா பேரச்சம் உலகையே உலுக்கி வருகிறது இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை எதிர்க்கும் அதிபர் யார் தெரியுமா?

(Brasília - DF, 24/03/2020) Pronunciamento do Presidente da República, Jair Bolsonaro em Rede Nacional de Rádio e Televisão..Foto: Isac Nóbrega/PR

கொரோனா பேரச்சம் உலகையே உலுக்கி வருகிறது. எப்படியாவது இதிலிருந்து மீண்டு விட வேண்டும் என அனைத்து நாடுகளுமே காத்து கிடக்கின்றன. அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயார் என்று சொல்லி வருகின்றன. இந்நிலையில் ஒரு நாட்டின் அதிபர் கொரோனா தடுப்பூசியைப் பற்றி எதிர்மறை கருத்தைக் கொண்டிருக்கிறார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 60 லட்சத்து 13 ஆயிரத்து 851 பேர். இன்றைய காலைவரை, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 32 லட்சத்து 82 ஆயிரத்து 158 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 81 ஆயிரத்து 255 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,10,50,438 பேர்

கொரோனா பாதிப்பிலிருந்து மீள பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த தொடங்கி விட்டன. இதில் சின்னச் சின்ன இடர்பாடுகள் இருந்தாலும் தடுப்பூசியை தொடர்ந்து அளித்து வருகின்றன. அமெரிக்கா 10 கோடி டோஸ் தடுப்பூசியை வாங்க திட்டமிட்டு ஆர்டர் செய்துள்ளது.

இந்நிலையில் பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனாரோ கொரோனா தடுப்பூசி அவசியம் இல்லை என்பதாகப் பேசியிருக்கிறார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் எங்கல் நிறுவனம் பொறுப்பேற்காது என்று கொரோனா தடுப்பூசியில் முன்னணியில் நிற்கும் ஃபைசர் சொல்லியிருப்பதை மேற்கோள் காட்டுகிறார்.

பிரேசில் நாடு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நாடு. இரு மாதங்களுக்கு முன் சற்று குறைந்திருந்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றுதான் அந்நாட்டில் 70 லட்சம் நோயாளிகள் எனும் எண்ணிக்கையைக் கடந்தது. மரணங்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்து விட்டது. பிரேசில் அதிபருமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்தான்.

பிரேசில் அதிபரின் இந்த முடிவு அந்த நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி செல்வது இப்போதைக்கு இல்லை என்பதே காட்டுகிறது.