டெல்லியில் மிதமான நிலநடுக்கம்!
தலைநகர் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ள குறித்த நிலநடுக்கத்தால் கண்டிடங்கள் குழுங்கியுள்ளதுடன், இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குருகிராமிலிருந்து 48 கி.மீ. தொலைவில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகாத நிலையில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.