März 28, 2025

ஆஸ்திரேலியாவால் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்கள் ‘ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள்’ என்ற கொள்கையை ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய அரசு  கடைப்பிடித்து வருகிறது.இந்த கொள்கையின் கீழ் இன்றும் சுமார் 1,500 அகதிகள் ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இக்கொள்கை கொண்டு வரப்பட்ட ஜூலை 2013 காலக்கட்டத்திற்குப் பின்னர் 3,127 பேரை கடல் கடந்த தடுப்பு முகாம்களுக்கு ஆஸ்திரேலிய அரசு அனுப்பியிருக்கிறது.

சுமார் 7 ஆண்டுகளாக கடந்த பின்னும் கூட, இந்த எண்ணிக்கையில் 47 சதவீத பேர் தடுப்பிலேயே உள்ளதாக கார்டியன் ஊடகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் 86.7 சதவீதமான பேர் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.