ஹெலவுக்கு தடை?
ஹெல” Hela ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர் தம்மிகா பண்டார, தனது ‘கொவிட் தடுப்பு மருந்து ’ வழங்கள் நடவடிக்கை தடுத்து நிறுத்தப் பட்டதாக தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்ட செயலாளருடனான சந்திப்பு மற்றும் அவரது அறிவுறுத்தலின் பேரில் அவர் இதை அறிவித்துள்ளார்.
இது குறித்த மருத்துவ அறிக்கைகள் வரும் வரை பாணிமருந்து விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5000 பேருக்கு சிரப்பை இலவசமாக விநியோகிப்பதாக அறிவித்ததை அடுத்து 10 ஆயிரக்கணக்கான மக்கள் வைத்தியர் தம்மிகாவின் வீட்டுக்கு வந்தனர்.
இது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி பாவனை செய்த பின்னர் ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.