Mai 12, 2025

வெள்ளம் வடிந்தபாடாகவில்லை:கடற்கரையில் சுமந்திரன்?

 

யாழ்ப்பாணக் குடாநாட்டின் அனைத்து நீர் நிலைகளும் நிறைந்துள்ள நிலையில் அதிகாலை இரண்டு மணி முதல் தொடர் மழை பெய்துவருவதால்; குடாநாடு முழுமையாக வெள்ள அவலம் காணப்படுகின்றது.

இதேநேரம் யாழ்.நகர உட்பட பல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

புரெவி புயல் அபாயம் கடந்த போதும் வெள்ளம் பலபகுதிகளிலும் மக்களது அன்றாட வாழ்வியலை சிதறடித்தே வருகின்றது.

இதனிடையே இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் ஒழித்துக்கொண்ட சுமந்திரன் வடமராட்சி கடற்கரைகளில் திரிவதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.