ரயில் உட்கட்டமைப்பு வரவு செலவு திட்டத்தில் 1 பில்லியன் பவுண்டுகள் குறைப்பு!
ரயில் உட்கட்டமைப்பு வரவு செலவு திட்டத்தில் இருந்து 1 பில்லியன் பவுண்டுகளை அரசாங்கம் குறைத்துள்ளது.
திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக், முன்னர் அரசாங்கத்தின் ‘சமன் செய்யும்’ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக சாதனை உட்கட்டமைப்பு முதலீட்டிற்கு உறுதியளித்தார்.
இப்போது வரை, 2019-24ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலத்திற்கான வலையமைப்பு ரெயிலின் மேம்பாடு வரவு செலவு 10.4 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், இந்த வாரம் ரயில் துறை அமைச்சர் கிறிஸ் ஹீடன்-ஹாரிஸ், வரவு செலவு திட்டம் இப்போது 9.4 பில்லியன் பவுண்டுகளாக இருக்கும் என்று கூறினார்.
இது ரயில் உட்கட்டமைப்பில் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட சில மேம்பாடுகளுக்கு ஒரு கேள்விக்குறியை வைத்துள்ளது.
இந்த ஆண்டு செலவிட முடியாமல் போன சில நிதிகளை அரசாங்கம் திரும்பப் பெற முயற்சித்தால், ஒட்டுமொத்தமாக 10 சதவீதம் வரை வரவுசெலவுத் திட்டத்தை குறைக்க முடியும் என்று ரயில் துறை கவலை தெரிவித்துள்ளது.