November 21, 2024

பிரான்ஸில் புதிய சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்: 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம்!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறியதால் 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம் அடைந்தனர்.

பிரான்ஸில் மோசமான நோக்கத்துடன் பொலிஸாரை புகைப்படம் அல்லது காணொளி எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கும் வகையில் புதிய பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய இந்த பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பொலிஸாரின் மிருகதனத்தை காட்டும் இது போன்ற சம்பவங்களை வெளிக்கொண்டுவர முடியாமல் போகும் எனவும் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும் எனவும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே இந்த பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரிஸில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.

பொலிஸார் மீது கற்கள், கண்ணாடி போத்தல்கள் மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.