வவுனியாவில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்
வவுனியாவில் சிங்களப் படையினரதும் பொலிஸாரதும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும்
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.சரியாக 6.05 இற்கு ஆலயங்களில் மணி ஒலி எழுப்பப்பட்டு வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. இதன்போது சில இடங்களில் துயிலும் இல்லப் பாடலும் ஒலிக்க விடப்பட்டது.
படையினரும் பொலிஸாரும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் தடைகளையும் மீறி மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
படையினரும் பொலிஸாரும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் தடைகளையும் மீறி மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.