März 29, 2025

சிறீதரன் வீட்டிலும் நினைவேந்தப்பட்டது மாவீரர் நாள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டில் இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை பிரதான சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

வன்னியில் உள்ள சிறிதரனின் வீட்டில் தமிழீழ மாவீரர் தினமான இன்று (27) மாலை உரிய நேரத்திற்கு இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்றது.