நாளொன்றிற்கு ஒரு மில்லியன் பிரித்தானியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
பிரித்தானியாவில் இன்னும் சில வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடுதல் துவங்கும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய சுகாதார செயலர்.
அத்துடன், நாளொன்றிற்கு ஒரு மில்லியன் பிரித்தானியர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தானே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக்கொள்ள இருப்பதாக பிரித்தானிய சுகாதார செயலர் Matt Hancock கூறியுள்ளார்.
யாருக்கு அதிக பாதிப்போ, அவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்றும், சில வாரங்களுக்குள் தடுப்பூசி போடுதல் என்றும் மீண்டும் இன்று அவர் தெரிவித்துக்கொண்டார்.
பைசர் தடுப்பூசியை வாங்குவது சாத்தியம் என்று சென்ற வாரம் தெரிவித்த Hancock, அதற்கு தரச்சான்றிதழ் அளிக்கப்பட்டதும், டிசம்பர் 1 முதல் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கும் என்றும் கூறியிருந்தார்.
அதிகாரிகள், பிரித்தானியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள், ஒப்புதல் கிடைத்ததும் தடுப்பூசி போடும் திட்டம் துவக்கும்.
தடுப்பூசி போடுவதற்காக அரசு சுமார் 40,000 பேரை புதிதாக பணிக்கமர்த்த இருப்பது குறிப்பிடத்தக்கது.