ஆப்கான் மற்றும் ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பியழைக்க டிரம்ப் உத்தரவு
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் தங்கியிருக்கும் அமெரிக்கப் படையினரை டொனால்ட் டிரம்ப் குறைக்கவுள்ளார் என பென்டகன் அறிவித்துள்ளது.4500 படையினரில் 2000 படையினர் அமொிக்காவுக்கு திருப்பி அழைக்கப்படவுள்ளர். தொடர்ந்தும் 2,500 படையினர் நிலைகொள்வார்கள்.
இதேபோன்று ஈராக்கில் நிலைகொண்டுள்ள 3000 படையினரில் 2500 படையினர் நிலைகொள்ளவுள்ளனர். இவர்கள் அடுத்தாண்டு சனவரி 15 ஆம் திகதிக்குள் அமெரிக்கா திருப்பவுள்ளனர்.
சனவரி 15 ஆம் திகதிக்குள் 2,000 படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் மேலும் 500 படையினர் ஈராக்கிலிருந்து திரும்பி வெளியேற்றப்படுவார்கள் என்று அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ் மில்லர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களை வெற்றிகரமான மற்றும் பொறுப்பான முடிவுக்கு கொண்டு வருவதற்கும், எங்கள் துணிச்சலான வீரர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கும் டிரம்ப்பின் கொள்கையை பிரதிபலிக்கின்றன என மில்லர் கூறினார்.