கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சித் தகவல்களை திருட முயற்சி!
கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் நிறுவனங்களை குறிவைத்து ஹேக்கிங் முயற்சிகள் நடைபெறுவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
சமீபத்தில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் தனது கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் திறன் கொண்டது என அறிவித்தது.
அதேபோல், மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா தனது கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டுள்ளது என நேற்று அறிவித்தது. இதனால், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்நிறுவனங்கள் அமெரிக்காவின் மேலும் சில நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகட்ட ஆராய்ச்சியில் உள்ளனர்.
அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா, கனடா, பிரான்ஸ், தென்கொரியா உள்பட மேலும் சில நாடுகளை சேர்ந்த மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சியில் முன்னிலையில் உள்ள நிறுவனங்களை திருட முயற்சிகள் நடப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷியா, வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை சைபர் தாக்குதல் மூலம் ஹேக் செய்து கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சிப்பதாக மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் உள்ள நிறுவனங்களின் லாக்-இன் கடவு சொல்களை திருட ரஷியாவின் ஸ்ரான்டியம், வடகொரியாவின் சின்ங் மற்றும் செரிம் ஆகிய மூன்று ஹேக்கிங் நிறுவனங்கள் முயற்சிப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுகாதாரத்துறையில் பெரிய முதலீடு செய்து இருக்கிறது. உலகெங்கும் எப்போதும் மார்கெட் உள்ளதுறை சுகாதாரத்துறை.ஆகையால், அதில் பெரிய முதலீடு செய்து இருக்கிறது. கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறது. இப்போது எல்லா நாடுகளும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால் இது மாதிரியான குற்றச்சாட்டு வைக்கிறதோ? என சந்தேகம் எழும்புகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்