மாடர்னா கோவிட் தடுப்பூசி 94.5% பாதுகாப்பைக் காட்டுகிறது!
கொரோனா வைரஸ் எதிரான புதிய தடுப்பு மருத்து 94.5 விழுக்காடு திறன்படச் செயற்படுகிறது என அமொிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மொடர்னா (Moderna) தகவல்கள் கோடிட்டுக்காட்டியுள்ளன.இது ஒரு „சிறந்த நாள்“ என்று மொடர்னா நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த சில வாரங்களில் தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அந்நிறுவனம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இது இன்னும் ஆரம்ப தரவு மற்றும் முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை.
ஃபைசரிடமிருந்து (Pfizer)இதேபோன்று 90 விழுக்காடு திறன்கொண்டது என முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளன.
இரு நிறுவனங்களும் தங்கள் தடுப்பூசிகளை வடிவமைக்க மிகவும் புதுமையான மற்றும் சோதனை அணுகுமுறையைப் பயன்படுத்தின.
குறித்த தடுப்பூசிகள் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.