März 31, 2025

சந்நிதி மடத்திற்கு வந்தது சோதனை!

கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மீறியதாக வரலாற்று புகழ்மிக்க செல்வ சந்நிதி ஆலய அன்னதான மடமொன்றிற்கு பூட்டுபோடப்பட்டுள்ளது.

மடத்தின் குரு மற்றும் சமையலாளர்கள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுமுள்ளனர்.

ஆலயத்தில் அடைக்கலம் புகுந்துள்ள நூற்றுக்கணக்கான அனாதைகளிற்கு சமைத்து வழங்கும் மடமே வல்வெட்டித்துறை காவல்துறை சகிதம் வந்த பொதுசுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளது.

இதனிடையே தீபாவளி தினமாகிய நாளைய தினம் மக்கள் ஆலயங்களில் ஒன்றுகூடாதீர்கள் என யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை நல்லை ஆதீனம் உள்ளிட்ட மதத்தலைவர்களும் ஆலயங்களுக்கு சென்று ஒன்றுகூடுவதை தவிர்த்து வீடுகளிலிருந்து அமைதியான முறையில் இவ்வருட தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.