März 28, 2025

மகிந்த கோரிக்கையில் வழிபாடு

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி கிளிநொச்சி தேரசமமாள் கிறிஸ்தவ ஆலயத்தில் விசேட திருப்பலி ஆராதனையும் கந்தசுவாமி ஆலயத்தில் யாக வழிபாடும் மற்றும் தும்பிணி விகாரையிலும் விசேட வழிபாடுகள் இன்று (08.11.2020) இடம்பெற்றுள்ளது.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் மதஸ்த்தலங்களில் விசேட வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிளிநொச்சி தேரசமமாள் கிறிஸ்தவ ஆலயத்தில் விசேட திருப்பலி ஆராதனையும் கந்தசுவாமி ஆலயத்தில் யாக வழிபாடும் மற்றும் தும்பிணி விகாரையிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரமர் ஆகியோருக்கு ஆசி வேண்டியும், கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காத்து, அவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.