November 21, 2024

நீ பாட்டு பாட : நாங்கள் எழுந்து ஆட கலக்கல்?

தேசியம் பேசிய கட்சிகள் அபிவிருத்தி அரசியலுக்கு வந்துள்ளதை டக்ளஸ் பாராட்டியுள்ளார்.

ஏதற்கெடுத்தாலும் தனக்கு மக்கள் போதிய அளவில் வாக்களிக்காமையினாலேயே எதையும் செய்யமுடியாதிருப்பதாக டக்ளஸ் சொல்வது வழமை.

இந்;நிலையில் தற்போது கூட்டமைப்பு,கூட்டணி மற்றும் முன்னணியென அனைத்து ம தரப்புக்களுமே சிங்கள அமைச்சர்களை வரவேற்று நல்லிணக்கத்தினுள் வந்துள்ளதனையே டக்ளஸ் வரவேற்றுள்ளார்.

இதனிடையே டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தின், ‚இது ஒரு நல்ல விசயம்‘ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

;யாழ். மாவட்ட செயலகத்தில இடம்பெற்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே ‚வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சு, சுற்றாடல் துறை அமைச்சு, காணி அமைச்சு ஆகியவற்றுக்கு பொறுப்பான அமைச்சர்களினால் கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர்களுக்கு கையளிக்கும் பொருட்டு பாதுகாக்கப்பட்ட மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட காடுகள் தவிர்ந்த வனப் பாதுகாப்பு ஆணையாளர் நாயகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எஞ்சியுள்ள காடுகளில் இருந்து காடுகள் அல்லாத நிலப் பிரதேசங்களை விடுவித்தல் தொடர்பாகவே குறித்த அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது‘ என்று தெரிவித்தார்.

இதன்போது, குறித்த அமைச்சரவை தீர்மானத்தினை வரவேற்ற நாடாளுன்ற உறுப்பினர், மேற்குறித்தவாறு தெரிவித்திருந்தார்.

வன பாதுகாப்பு மற்றம் வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றம் தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றினால் வன்னி உட்பட பல்வேறு பிரதேசங்களில் மக்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைக்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக குறித்த விடயம் தொடர்பாக அமைச்சரவையில் தொடர்ச்சியாக பிரஸ்தாபித்த கற்றொழில் அசைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விவகாரத்திற்கு நியாயமான மாற்று ஏற்பாடு ஒன்றை வலியுறுத்தி வந்த பின்னணியிலேயே குறித்த அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது