ஊரடங்கு நீக்கினாலும் வேலைக்கு வரவேண்டாம்??
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (09) நீக்கப்பட்டாலும் அரச நிறுவன சேவையில், அத்தியாவசியமான மிகக் குறைந்தளவான ஊழியர்களை மாத்திரம் அழைக்க பொது நிர்வாக அமைச்சு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே கொழும்பு மாநகரசபையின் 85 ஊழியர்கள் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் சுகாதாரத் துறை மற்றும் பல துறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைத் துறையில் பணியாற்றுகிறார்கள் என்று அவர் கூறினார்.
இருப்பினும், கொழும்பு மக்களுக்கு சேவை செய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணியுடன் கட்டாயமாக நீக்குவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக இருக்கும்
மட்டக்குளிய, மோதர, புளூமெண்டல், மாளிகாவத்த, பொரள்ள, தெமடகொட, கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டிய, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, வாழைத்தோட்டம் மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொட, கடவத்த, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜாஎல மற்றும் சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
களுத்துறை மாவட்டத்தில் ஹொரண மற்றும் இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும் வேகட கிராம் சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
குருணாகல், குளியாபிட்டிய, கேகாலை மற்றும் மாவனெல்ல பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமும் நாளை காலை 5 மணியுடன் நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.