Mai 12, 2025

இனிமேல் எல்லோரும் வீட்டுக்கு?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், முதலாவது பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டு 14 நாள்கள் கழிந்த பின்னர், இரண்டாவது பரிசோதனை நடத்தாமல், அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்போவதாக அவர் கூறினார்.

இடைப்பட்ட சிகிச்சை நிலையங்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், நோய் அறிகுறிகள் காட்டாதவர்கள் தத்தமது வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவர்-என்றார்.