Mai 12, 2025

பொரளை பகுதியில் அதிகளவானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிப்பு – சுகாதாரத் தரப்பு தகவல்கள்

பொரளை பகுதியில் அதிகளவானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொரளையில் சில பகுதிகளில் எழுமாறான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது 90 வீதமானவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.

சனத்தொகை பரம்பல் அதிகளவில் காணப்படும் இந்தப் பகுதிகளில் எழுமாறான அடிப்படையில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையில் அதிகளவான தொற்றாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.