வடக்கிற்கு வருகின்றனர் அமைச்சர்கள்?
இலங்கையில் ஆளுங்கட்சி அமைச்சர்கள்; வடமாகாணம் நோக்கி கொரோனா அச்சத்தின் மத்தியிலும் பயணங்களை தொடங்கியுள்ளனர்.
அடுத்துவரும் வாரங்களில் புதிய அரசின் 14 அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அவர்களது பரிவாரங்கள் வடக்கிற்கு வருகை தரவுள்ளனர்.
நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் 200 பேர் வரையில் பங்குபெறவிருக்கும் நிகழ்வு அமைச்சர் ஒருவர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மரணச் சடங்குகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் கூட அதிகபட்சம் 50 பேர் வரை தான் பங்குபற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முடக்கப்படிருக்கின்ற தென்னிலங்கையிலிருந்து வருகைதரும் அமைச்சரின் நிகழ்வில் சுமார் 200 பேர் வரையானோரை பங்குபெற வைத்து, சமூக பரவலுக்கு இலகுவாக வித்திடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதனிடையே நாளை வெள்ளிக்கிழமை யாழில் மூன்று வீதிகளை புனரமைக்கும் நிகழ்விற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வருகை தரவுள்ளார்.
மறுபுறம் யாழ்ப்பாணத்திற்கு அடுத்த வாரம் வருகை தரவிருக்கும் 14 அமைச்சர்கள் பங்கெடுக்கும் கூட்டங்களிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலக அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.