Mai 12, 2025

கொழும்பில் கொரோனா குறைந்தபாடாக இல்லை?

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இருந்து இன்று வியாழக்கிழமை (05) 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே Dinuka Guruge தெரிவித்தார்.

இவற்றில் 04 தொற்றாளர்கள் கொழும்பு வடக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் (apartment complex) இருந்து கண்டறியப்பட்டுள்ளன.

கூடுதலாக, தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு துறைமுக கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் துறைமுகத்தில் பணியாற்றும் 08 சுங்கப் பணியாளர்களும் (customs officers) அடங்குவர். 75 சுங்க பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்