பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளியிட்டது.
“தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்”- அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த சில முக்கிய தகவல்களை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளியிட்டது. சூரரைப் போற்று தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவலின் ஒரு அங்கமாக, 200க்கும் அதிகமான நாடுகளில் ப்ரைமில் நவம்பர் 12 முதல் வெளியாகிறது.
ஆக்ஷன் டிராமா சூரரைப் போற்று படத்தில் சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது குறைந்த விலை விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான, கேப்டன். ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை பற்றிய கற்பனை வடிவமாகும்.
சூர்யா இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “எனது முந்தைய கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையானவை. ஆனால் இந்த கதாபாத்திரம், தனது வாழ்க்கையை வாழ்ந்த ஒரு பணிவான மனிதரைப் பற்றியது. அவர் தான் கண்ட கனவைப் பெரிதாகச் சாதித்த ஒரு உண்மையான ஹீரோ. ஒரு விமான நிறுவன முதலாளியாக ஆவதற்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து சிக்கல்களையும் அவர் கடக்க வேண்டியிருந்தது. அது எளிமையான காரியம் அல்ல. உண்மையில் அவர் இந்தியாவின் முகத்தை மாற்றினார்” என்றார்.