Dezember 3, 2024

தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே சதீஷ்குமார் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது!

தமிழில் ரம்மி, மதயானை கூட்டம், பரதேசி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார். இவர் கொரோனா காலத்தில் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்து கொள்ளவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமாருக்கு உடல்நலக்குறைவால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திரையுலகை சேர்ந்தவர்களும் கொரோனா பாதிப்பால் வீடுகளில் முடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் தமன்னா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா, ஜெனிலியா, ராஜமெளலி உள்ளிட்ட பலரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மீண்டு உள்ளனர்.