Mai 13, 2025

கல்லுண்டாய் குடியேற்ற பகுதியில் கடல் நீர் தடுப்பணைகள் சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்த நிலமையினை அரசாங்க அதிபர் பார்வையிட்டார்

கல்லுண்டாய் குடியேற்ற பகுதியில் கடல் நீர் தடுப்பணைகள் சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்த அனர்த்த நிலமையினை நேரில் சென்று மாவட்ட செயலக அரசாங்க அதிபர் பார்வையிட்டார் .

பருவ பெயர்ச்சி தாக்கத்தின் காரணமாக கல்லுண்டாய் பிரதேசத்தில் கடல் நீர் தடுப்பணைகள் சேதமடைந்துள்ளமையினால் J/35, J/36 ஆகிய கிராம சேவகர் பிரிவில் உள்ள 87 குடும்பங்களை சேர்ந்த 310 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவ் அனர்த்த நிலையினை அறிந்து மாவட்ட அரசாங்க அதிபர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், வலி தெற்கு பிரதேச தவிசாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு இராணுவத்தினருடன் கலந்துரையாடி குறித்த மக்களிற்கான உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.