யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதுகெலும்பாக கூட்டறவு சங்கங்கள் இருந்துள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுறவுத் துறையினர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தற்போதுள்ள அரசாங்கத்தில் கூட்டுறவுத் துறையை மேன்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் காணப்படுகிறது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமாருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள்
கூட்டுறவின் கீழ் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பிரதேச செயலக ரீதியாக இயங்கும் உற்பத்தி நிறுவனங்களிடம் கருத்துக்களை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி),மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக கணக்காளர், கூட்டுறவு உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், கூட்டுறவு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.