பிரஞ்சுப் பொருட்களை புறக்கணிக்கக் கோரும் இஸ்லாமிய நாடுகள்! வேண்டாம் என்கிறது பிரான்ஸ்!
பிரான்சில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமையை பிரஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் பாதுகாப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்சின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் குறிப்பாக குவைத், கட்டார், ஜோர்டான் போன்ற நாடுகளில் அமைந்துள்ள வணிக நிலையங்களில் பிரஞ்சுப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
அத்துடன் லிபியா, சிரியா, மற்றும் காசா பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெளிப்படடத் தொடங்கியுள்ளன.
முகமது நபியின் கேலிச்சித்திரங்களை வெளியிடுவது தொடர்பாக பிரான்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை பிரஞ்சு ஆசிரியர் சாமுவேல் பாட்டி மாணவர்களுக்கு காட்டியதன் விளைவாக அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் மக்ரோன் வெளியிட்ட கருத்துக்களே இஸ்லாமிய நாடுகளில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக பிரான்ஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு நாடு ஒருபோதும் இடமளிக்காது. நாங்கள் வெறுக்கத்தக்க பேச்சை ஏற்கவில்லை. நியாயமான விவாதத்தை பாதுகாக்கிறோம். கேலிச்சித்திரங்களை பிரான்ஸ் ஒருபோதும் விட்டு விடாது என்று அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உறுதி எடுத்துக்கொண்டார். இதுவே பிரஞ்சுப் பொருட்களை புறக்கணிப்பதற்கு தூண்டுதலாக அமைந்தது.
பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிப்பதற்கான அழைப்புகளை நிறுத்துமாறு பிரான்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரபு நாடுகளை வலியுறுத்தியது.
புறக்கணிப்புக்கான இந்த அழைப்புகள் ஆதாரமற்றவை, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதே போல் நமது நாட்டிற்கு எதிரான அனைத்து தாக்குதல்களும் தீவிர சிறுபான்மையினரால் முன்னெடுக்கப்படுகின்றன.
மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் தீவிர இஸ்லாத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உறுதியளித்ததற்கு திரு மக்ரோனுக்கு மனநல பரிசோதனை தேவை என்றும் பிரஞ்சுப் பொருட்களை புறக்கணிக்கவும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார். துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு இம்மானுவல் மக்ரோனை அவமதித்தாகக் கூறி துருக்கிக்கான தூதுவரை பிரான்ஸ் திருப்பி அழைத்திருந்தது.