பிரான்ஸில் சடுதியாக அதிகரித்த உயிரிழப்பு! கடந்த 24 மணிநேர நிலவரம்!! (ஒக்.-19)
பிரான்ஸில் சடுதியாக அதிகரித்த உயிரிழப்பு! கடந்த 24 மணிநேர நிலவரம்!! (ஒக்.-19)
பிரான்ஸில் கொரோனா தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளதுடன், தற்போது உயிரிழப்புக்களும் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் தடுப்பு நடவடிக்கைகளில் மிக மிக கவனம் செலுத்த வேண்டும் என பிரான்ஸ் சுகாதாரத் திணைக்களம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
இவ் விடயங்களில் மக்கள் கண்டிப்பாக கவனத்தில் கொண்டு செயல்படுவதன் மூலமே தொற்று எண்ணிக்கை குறைவடைவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
அந்தவகையில், பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதாரபணிமனை வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 19 , 2020 திங்கட்கிழமை
146 பேர் மரணம்
13,243 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….
மொத்த இறப்புக்கள் 33,623
மொத்த தொற்றுக்கள் 910,277
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,912
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 22,711 (24 மணி நேரத்தில் +146) ஆகும்.
பிரான்சில் கடந்த 7 நாட்களில் 7,978 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 1,441 பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 13.4% ஆக உயர்கிறது.
பகிருங்கள்.. உங்கள் கருத்துக்களை பதியுங்கள், மேலும் இது போன்ற பல தகவல்களைப் பெற எமது பக்கத்தை தொடருங்கள்… follow = see first
Like
Comment
Share