November 22, 2024

யாழ் மருதங்கேணி பிரதேச மருத்துவ மனை  கொரோணா மருத்துவ மனையாக மாற்றம் மக்கள் எதிர்ப்பு!போலீஸ் குவிப்பு

மருதங்கேணி பிரதேச மருத்துவ மனை  கொரோணா மருத்துவ மனையாக மாற்றம் மக்கள் அச்சத்தில், போலீஸ் குவிப்பு, பலர் அச்சுறுத்தப்பட்டனர், நான்கு நாட்களாக மருத்துவ மனை செயலிழப்பு, அச்சப்பட தேவையில்லை  மாகாண பணிப்பாளர் கருத்து

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை கொரோனா மருத்துவ நிலையமாக மாற்றும்  நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

மாவட்டத்துக்கு ஒரு கொரோணா வைத்திய சாலை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ்  யாழ்ப்பாணத்துக்கான கொரோனா மருத்துவமனையாக மருதங்கேணி பிரதேச மருத்துவமனை தெரிவு செய்யப்பட்டு அதன் பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு இன்றைய தினம் அங்கு பணியாற்றுவதற்கான மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட மருத்துவ பணியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதற்கான முன்னேற்பாடாக அழைக்கப்பட்டிருந்த மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகளை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் பணிக்கு காலை 8 மணியிலிருந்து அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
இதே வேளை தமது மருதங்கேணி பிரதேச மருத்துவமனைக்குஒரு பொறுப்பு மருத்துவ அதிகாரி உட்பட இரண்டு மேலதிக மருத்துவர்களும் ஒரு பல் மருத்துவரும்  கடமை ஆற்ற வேண்டிய நிலையில் தற்போது ஓய்வு பெற்ற பதவு வைத்திய அதிகாரி ஒருவரே கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும், இதனால்  மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஆண்,  பெண் மகப்பேற்று விடுதிகள் இயங்காது இருப்பதாகவும்,  வெளிநோயாளர் பிரிவு கூட ஒழுங்காக இயங்காத நிலையில் கொரோணா மருத்துவமனை அமைக்கப்பட்டிருப்பது  தமக்கு வேதனை அளிப்பதாக மருதங்கேணி பிரதேச மக்கள் தெரிவிக்கிறார்கள்.

தமக்கான அடிப்படை மருத்துவ வசதிகளை  ஏற்படுத்தி தராத சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம், தற்போது வெளிநோயாளர்  சிகிச்சையை கூட  பெற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாக  தெரிவித்து  இன்றைய தினம் மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்க முன் வந்திருந்தனர்.

இதனால்   போலீசார் குவிக்கப்பட்டு வீதியால் சென்ற அனைவரும் பரிசோதிக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டும் பலர்  விரட்டப்பட்டப்பட்டுமிருந்தனர்.

மருத்துவமனை அபிவிருத்திச் சபை செயலாளர் மற்றும் பொருளாதார சமூக செயற்பாட்டாளர்கள் பிரதேச மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் போலீசாரின் கடுமையான அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இருந்தார்கள்

இன்றைய தினம் மருத்துவமனையின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரை அழைத்து போலீசார் கடும் தொனியில் அச்சுறுத்தும் தொனியில் அவர்களை மிரட்டி இந்த இடத்தில் நிற்க வேண்டாம் என்று கூட அனுப்பியது நிலைமை எங்களால் அவதானிக்க முடிந்தது

இதேவேளை இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்ஸ்வரன் அவர்களை கேட்டபோது

இன்றைய தினம் முதலாவது கொரோணா நோயாளியாக இருக்கின்ற பருத்தித்துறை பேருந்து சாலையில் நடத்துனரை பிற்பகல் 3 மணிக்கு பின்னர் அனுமதித்து சிகிசயசை அளிக்க உள்ளதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன்.,  மருதங்கேணி பிரதேச மருத்துவமனையில் இருந்த வெளிநோயாளர் சேவை

பிறிதொரு கட்டடத்தில் வெளி நோயாளர் பிரிவுவை இயங்கும் நடவடிக்கைகள்  இடம் பெற்றுவருவதாகவும் உள்  நோயாளர்களை நோயாளர்  காவு வண்டிகள்  ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள்  என்றும் சமக்கள் எவரும் அச்சப்படத் தேவையில்லை,  தொற்று ஏற்படாத வகையில் பாது காப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்

கொரோனா மருத்துவமனை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று  நான்கு நாட்கள் ஆகின்றன  இந்நிலையில் நான்கு நாட்களும் மருதங்கேணி பிரதேச மருத்துவமனையில் வெளிநோயாளர் சிகிச் சை கூட இடம்பெறவில்லை என்றும்,  பிரதேசத்தில் சுமார் 35 கிலோமீட்டர் நீளமும் 3 km அகலமும் கொண்ட

பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற  நிலையில்லும் போக்குவரத்தில்  பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன.இதனால்  பிற இடங்களுக்குச் சென்று கூட மக்கள் சிகிச்சை பெறுவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இதேவேளை கருத்து தெரிவித்த பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினரும் மருத்துவமனையின் அபிவிருத்திக்குழு சேவைப் பொருளாதாரம் ஆகிய திரு வேலுப்பிள்ளை பிரசாந்தன்

தாம் மருத்துவமனைக்கான மருத்துவர்கள் இன்மை மற்றும் குறைபாடுகள் தொடர்பில்  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் பல தடவைகள் தொடர்பு கொண்டு மருத்துவர்கள் மற்றும் வெற்றிடமாக உள்ள ஆளணியை நியமிக்க கோரியும் எந்தவித அக்கறையும்  காட்டாத மாகாண சுகாதார பணிப்பாளர் அவர்கள்,   தங்களுடைய பிரதேசத்தில் பல வசதிகளைக் கொண்ட கட்டிடங்கள் கொரோணா வைத்திய சாலை அமைப்பதற்கு இருந்தும்  மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையை கொரோணா  வைத்தியசாலையாக மாற்றுவதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கொரோணா மருத்துவ நிலையம் அமைப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை  என்றும்,  மருதங்கேணி பிரதேச மருத்துவமனை சாதாார மக்களுக்கான வழமையான சிகிச்சை நிலையமாக தொடர்ந்தும் இயங்க வைக்க. வேண்டும் ஏன்றும் மேலும் தெரிவித்தனர்.

இதே வேளை நேற்றைய தினம் அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வீடுகளுக்குச் சென்ற பளை  போலீசார் அவர்களை கடுமையாக மிரட்டியும் அச்சுறுத்தியும் சென்றிருக்கிறார்கள்.
குறிப்பாக இன்றைய தினம் மருதங்கேணி பிரதேச மருத்துவமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற உள்ளதாகவும்,  அதில் தாங்கள் கலந்து கொண்டால் அல்லது இணைந்து கொண்டால் தாங்கள் கைது செய்யப்படுவீர்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்றைய தினமும் பலர் கடுமையாக அச்சுறுத்தப்பட்டு இருக்கிறார்கள் இதனை நாங்கள் நேரடியாக எங்க அவதானித்தோம்