November 22, 2024

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தாதியர் களுக்கு கொரோணா தொற்றாளர்களை பராமரித்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது


தற்போது நாட்டில் COVID-19 தொற்றுஏற்படும் நோயாளர்களின்எண்ணிக்கை
அதிகரித்து வரும் நிலையில்
COVID-19 தொற்று ஏற்படும் நோயாளர்களின் பராமரிப்பின்போது சுகாதார பராமரிப்பாளர்கள் அணிந்திருக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு அணிவது, பராமரிப்பின் பின் பாதுகாப்பாக எவ்வாறு கழற்றுவது என்பவை தொடர்பான செய்முறையுடன் கூடிய விழிப்புணர்வு கலந்துரையாடல் பருத்தித்துறை ஆதார வைத்திய வைத்தியசாலையின் தொற்றுநோய் தடுப்பு பிரிவினரால் நடாத்தப்பட்டது.

விழிப்புணர்வு செயலமர்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டின் போது கொரோணா தொற்று தடுப்பு அங்கியினை எவ்வாறு பயன்படுத்துவது தொற்றுக்குள்ளான நோயாளர்களை அணுகும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் மற்றும் கிருமித் தொற்று ஏற்படாவண்ணம் எவ்வாறு உத்தியோகத்தர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது