November 22, 2024

பிரான்சில் ஊடரங்கு! மீறுவோருக்கு € 135 அபராதம்

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு பாரிஸ் உட்பட 9 நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருவதாக பிரான்ஸ் அதிபர்  இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.எதிர்வரும் சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த ஊடரங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரங்கு நடைமுறைக்கு வந்ததும் நான்கு வாரங்கள் இந்த ஊரடங்கு நீடிக்கும் என மன்ரோன் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் உணவகங்களுக்கும் தனியார் வீடுகளுக்கும் வருவதைத் தடுக்கும் என்று திரு மக்ரோன் விளக்கியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் போது குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நின்றால் சரியான காரணம் தேவைப்படும் என்று மக்ரோன் கூறியுள்ளார்.

அத்தியாவசிய பயணங்கள் அனுமதிக்கப்படும். ஊரடங்கு உத்தரவை மீறிய எவருக்கும் € 135 அபராதம் விதிக்கப்படும்.

பாடசாலைகள் திறந்திருக்கும். மேலும் பகலில் மக்கள் பிராந்தியங்களுக்கு இடையில் பயணிக்க முடியும்.

கூடுதலாக, ஆறு பேருக்கு மேல் தனியார் வீடுகளுக்குள் கூடிவருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. ஆனால் பெரிய வீடுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று திரு மக்ரோன் விளக்கியுள்ளார்.

புதிய நடவடிக்கைகளால் நிதி ரீதியாக பாதிக்கப்படும் வணிகங்கள் மாநில உதவிக்கு தகுதி பெறும் என்றார்.