November 22, 2024

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு – சௌபாக்கிய வழிகாட்டல் கலந்துரையாடல்!

வறுமை ஒழிப்பு சர்வதேச தினத்துடன் இணைந்ததாக நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு – சௌபாக்கிய வழிகாட்டல் கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இன்று (15.10.2020) மாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள் அபிவிருத்தி உத்தியோகதாதர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இம்மாதம் 17ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள வறுமை ஒழிப்பு சர்வதேச வாரத்துடன் இணைந்ததாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் பொருளாதார வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரிவின் மூலம் மனைப் பொருளாதார அலகினை பலப்படுத்தப்படும் வேலைத்திட்டமாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக மனைப்பொருளாதார அலகினை பலப்படுத்தப்படும் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது. குறைந்த வருமானம் பெறும் மக்களை சுயபலத்தின் ஊடாக கூடிய வருமானம் பெறுவோராக ஆக்கும் பொருட்டு சமுர்த்தி நிவாரணம் பெறுவோரின் நிகழ்கால நிலமைகளை அறியும் வகையில் இவ்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனங்களில் வீட்டுத் தோட்டம்- சௌபாக்கியா வேலைத்திட்டம் மிக முக்கியம் வாய்ந்த நிகழ்ச்சித் திட்டமாகும்.இந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் இத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது . மேலும் வறுமை ஒழிப்பு சர்வதேச வாரத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள 210 பயனாளிகளுக்கு நாற்றுக்களும் விதைப் பக்கற்றுக்களும் பிரதேச செயலக ரீதியாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.