Mai 12, 2025

இலங்கையில் முழுமையான முடக்கம்?

 

மக்கள் முழுமையாக ஒத்துழைக்காவிடின் மீண்டும் முழுமையாக முடக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததென இலங்கை இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 39 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 22 ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.மினுவங்கொட ஆடை தொழிற்சாலை தொற்று ஆரம்பித்தபின் தொற்றுக்குள்ளானோர் இதுவரை 1247 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.