Mai 12, 2025

முகக்கவசம்: இல்லாவிடின் சிறை?

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கட்டாயமாக கடைப்பிடித்தல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை கொண்ட வர்த்தமானியை வெளியிட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் மற்றும் 06 மாதங்கள் சிறையில் அடைக்கப்படலாம் என இலங்கை சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி உட்பட 11 தேசிய கல்வியியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றம் செய்யப்படவுள்ளது.இதற்கேதுவாக நாளை காலை ஆசிரிய மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.