März 28, 2025

ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவில் 3 கிலோமீற்றர் நீளமான வீதிக்கு காபட் இடும் பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வேண்டுகோளின் பேரில்  ஜனாதிபதியின் விஷேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக கற்குளம் படிவம் 1,2,3,4 ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதான வீதி புனரமைப்பிற்கு 78 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப பணிகள் உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் வவுனியா நகரசபை உபநகர பிதா சு.குமாரசமி, தெற்கு தமிழ் பிரதேசசபை உப நகரபிதா. வே.மஹேந்திரன், பிரதேசசபை உறுப்பினர் திரவியவதனி, வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.