தற்போது பயிற்சி பெறும் பட்டதாரிகள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டு – அரசாங்க அதிபர் ம. பிரதீபன்
அண்மையில் அரச சேவைகள் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான முதலாம் கட்ட பயிற்சி நெறியாக யாழ் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் முகாமைத்துவ பயிற்சிகளை முடித்துக் கொண்ட191 பட்டதாரிகளுக்கான பயிற்சி நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
51வது படைப்பிரிவினரின் ஒழுங்குபடுத்த குறித்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம பிரதீபன் மற்றும் 51ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி, 511,521 வது பிரிகேட் கட்டளைத் தளபதிகள் கலந்து கொண்டிந்தனர்
இந்த மூன்று வார பயிற்சிகளில் சிறப்பாக செயற்பட்ட முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த பயிற்சி நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
இன்றைய பட்டதாரிகளுக்கான இந்த மூன்று வார முகாமைத்துவ பயிற்சியை பூரண படுத்தி இருக்கின்ற அனைவரையும் வரவேற்பதோடு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கின்ற 51 வது படைப்பிரிவினர் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளவாளர்கள் தன்னார்வ முறையிலே தங்களுடைய பயிற்சிகளை வழங்கியிருக்கின்றார்கள்
அந்த வகையிலே அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொண்டு
நீங்கள் அரச சேவையிலே உள்வாங்கப்பட்டிருக்கிறீர்கள்.
நான்நினைக்கின்றேன் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று நீண்ட காலமாக வேலைக்காக காத்திருந்து வேலையில்லா பட்டதாரிகள் என்ற பெயரோடு நீண்ட காலம் வேலைக்காக காத்திருந்தீர்கள்
அந்த சந்தர்ப்பத்தில் அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களுடைய „சுபீட்சத்தின் நோக்கு“ என்ற திட்டத்தின் கீழ் உங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றமை உண்மையிலே முக்கிய விடயமாக காணப்படுகின்றது
அரச சேவை என்பது உண்மையிலே பட்டதாரிகளுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது அதற்கமைய அரச சேவையில் நீங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றீர்கள் அந்த வகையில் பட்டதாரி வேலை வாய்ப்பினை பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள் கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி அரச சேவையினுடைய வளர்ச்சியில் உங்களுடைய காத்திரமான பங்கை நீங்கள் வழங்க வேண்டியிருக்கின்றீர்கள் நிறைய எதிர்பார்ப்புகளோடு கடந்த காலங்களிலே பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று இருப்பீர்கள் கபொத உயர்தரப் பரீட்சைகளில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாக அங்கிருந்து வெளியேறி நீங்கள் பலஎதிர்பார்ப்புகளோடு இந்த வேலைவாய்ப்பு நோக்கி வந்திருக்கின்றீர்கள்
பலர் தனியார் துறைகளில் கடமையாற்றி தற்பொழுது அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டு உள்ளீர்கள் அதற்கு மேலாக எங்களுடைய மக்கள் இந்த பிரதேச மக்கள் நீண்ட எதிர்பார்ப்புகளோடு உங்களை வரவேற்க காத்திருக்கின்றார்கள் அவர்களுடைய வேலைகளை அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு இந்த அரச இயந்திரத்தினுடைய முறையான சேவையை பொதுமக்கள் இன்று எதிர்பார்த்திருக்கிறார்கள் ஆகவே அரச சேவையில் எதிர்பார்க்கின்ற நிறைய விடயங்களை உங்களிடம் பெற்றுக் கொள்வதற்கு எங்களுடைய மக்கள் காத்திருக்கிறார்கள்
ஆகவே நீங்கள் எதிர்பார்ப்புகளோடு காத்திருந்து பட்டதாரிகளாக அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றீர்கள் அதேபோல உங்களுடைய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் காத்திருக்கின்றார்கள் உங்களுடைய சேவை அவர்களுக்கு சரியான முறையில் கிடைக்க வேண்டும் உங்களுக்கான இந்த பயிற்சி மிகவும் சிறப்பான முறையில் இந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக துறைத்தலைவர்களின் ஏற்பாட்டால் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது உங்களுக்கான இந்த பயிற்சி நெறிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் ராணுவத்துடன் இணைந்து மேற்கொண்டு வந்தோம் அந்த வகையில் மிகச் சிறப்பான முறையில் இந்த பயிற்சி அமைந்திருக்கின்றது இன்று காலையில் இயக்கச்சி பகுதியிலும் ஒரு பயிற்சி நிறைவு நிகழ்வு இடம்பெற்றது
நீங்கள் ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் துறை சார்ந்தவர்களாக அல்லது பீடங்கள் சார்ந்தவர்களாக உங்களுடைய கற்க நெறிகளை பூர்த்தி செய்திருப்பீர்கள் இந்த பயிற்சியினால் நீங்கள் எல்லோரும் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து இந்த பயிற்சியை பெற்றுக் கொண்டீர்கள் ஆகவே உங்களுக்கு குழு மனப்பான்மையும் அதேவேளையில் மற்றவர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளுகின்ற தன்மையும் வளர்ந்திருக்கும் அடுத்ததாக தலைமைத்துவம் சார்ந்த பயிற்சியினை நீங்கள் பெறவுள்ளீர்கள் மேலும் பல்வேறுபட்ட பயிற்சிகளை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் வேலை வாய்ப்பு கிடைத்த அனைத்து பட்டதாரிகளுக்கும் இவ்வாறான பயிற்சி நெறிகள் பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை மிகப்பெரிய வரப்பிரசாதமான ஒரு விடயமாக காணப்படுகின்றது எனவே இவ்வாறான சிறந்த பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டு இந்த நீங்கள் பயிற்சி மூலம் பெற்றுக் கொண்ட அறிவினை பாதிக்கப்பட்ட எமது மாவட்டத்தில் உள்ள மக்களுக்குரிய சேவையாக நீங்கள் வழங்க வேண்டும்
இந்த பயிற்சிகளை பெற்றுக்கொண்ட தன் வெளிப்பாட்டை உங்களுடைய அரச சேவையில் காண்பிக்க வேண்டும் இதுவே எனது கருத்தாக அமைகிறது எனவே நீங்கள் பெற்ற பயிற்சிகள் ஏதோ ஒரு விதத்தில் உங்களுடைய அரச சேவையில் பயன்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்….