März 28, 2025

லண்டனில் தமிழர் வாழும் பிரதேசத்தில் பொலிசார் சற்றுமுன் அதிரடி நடவடிக்கை.

625.500.560.320.160.600.666.800.900.160.90 4

லண்டனில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் சவுத் ஹரோ( Sauth Harrow) பிரதேசத்தில் பிரித்தானிய காவல்துறையின் ஆயுதம் தாங்கிய சிறப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை சற்று முன் மேற்கொண்டுள்ளார்கள்.

வாகனங்கள் உலங்கு வானூர்தி சகிதமாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தப் பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியை வழிமறித்த காவல்துறையினர் அதில் பயணம் செய்த ஒரு இளைஞனை கைதுசெய்துள்ளார்கள்.

அந்தச் சம்பவத்தில் ஒரு தமிழரும் கைசெய்யப்பட்ட காட்சியையும் எங்களுடைய ஊடகவியலாளர் படம்பிடித்துள்ளார்.

ஆனாலும் அவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.