நேற்று நடைபெற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ் இன்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்!
முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையால் நேற்று நடைபெற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ் இன்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் 256-வது கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்குழுமத்தின் தலைவராக உள்ள ஓ. பன்னீர்செல்வம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். முதல்வர் வேட்பாளர் யார் என்பது ஆலோசனையில் முடிவு எட்டப்படாததால் அதிமுக நிர்வாகிகள் முதல்வர் , துணை முதல்வர் என மாறி மாறி சந்தித்து வருகிறார்கள். இதனால் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் பங்கேற்ற ஓபிஎஸ் நேரில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
கொரோனா பொது முடக்கம் கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்து முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடனான கூட்டத்தை புறக்கணித்தார் ஓபிஎஸ்.இதன் எதிரொலியாக சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கவுள்ள செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்க நிகழ்ச்சி அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை. இதனால் பெரும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மீண்டும் ஓபிஎஸ் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதால் ஓபிஎஸ்-இன் அரசியல் நகர்வு என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி போயுள்ளனர்.