நெடுந்தீவில் உறவுகளை ஒன்றினைக்கும் ஊரும் உறவும் நிகழ்வு!
நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணைந்து ஆரோக்கியமான சமூகம் ஒன்றை உருவாக்குவோம்; என்ற தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று நெடுந்தீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது பகல் 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் நெடுந்தீவில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் உறவுகளும் அதேபோல நெடுந்தீவு மண்சார்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியுள்ள நெடுந்தீவின் உறவுகளும் ஒன்றிணைந்து தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர் குறிப்பாக நெடுந்தீவு பிரதேசத்தின் கல்வி கல்வி பொருளாதாரம் போக்குவரத்து ஆவணப்படுத்தல் குடிநீர் தொடர்பிலும் ஏனைய பல்வேறு தேவைகள் தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்தின் பல பகுதிகளிலும் வாழுகின்ற ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்றைய தினம் இந்த நிகழ்வில் ஒன்று கூடி தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆதரவுகளையும் வழங்கியிருந்தனர் இதில் அரசியல் கட்சி பேதங்கள் இன்றி பலர் கலந்துகொண்டிருந்தனர் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதத்தலைவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை பல்வேறு பிரதேசங்களில் இருந்து நெடுந்தொகை மற்றும் தனியார் படகுகள் மூலம் நெடுந்தீவு நோக்கி பயணித்த உறவுகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் எதிர்காலத்தில் இந்த பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பிலும் அதிகளாவிலானோர் தமது கருத்துக்களை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது