வவுனியாவில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல்!
வவுனியாவில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலொன்று நேற்று (29) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வவுனியா ஊடகவியலாளர்கள், சமாதானப் பேரவையின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தர்.
இன,மத நல்லிணக்கத்திற்கு ஊடகவியலாளர்களின் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்ற கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு வளவாளராக சட்டத்தரணியும் ‘அனிதா’ சிங்கள பத்திரிகையின் ஆசிரியர் கே. டபிள்யூ. ஜெனரஞ்சன கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தார்.
இக்கலந்துரையாடல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.