வருங்கால முதல்வர் !? நிரந்தர முதல்வர் !? என்கிற கோஷங்களால் மீண்டும் ஒலித்தன!
வருங்கால முதல்வர் !? நிரந்தர முதல்வர் !? என்கிற கோஷங்களால் அதிமுகவுக்கு இரண்டு பிரிவுகளாக அணி சேர்க்கை உள்ள நிலையில், செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ஏற்கெனவே இந்த குழப்பத்தால் நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பம் அடைந்த நிலையில், அதை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக இன்றைய செயற்குழு இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்துக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்தபோது, அவரது ஆதரவாளர்கள் வருங்கால முதலமைச்சர் வாழ்க என கோஷங்களை எழுப்பினர். இதனால் தலைமைக் கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் நிரந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என உற்சாக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அதிமுக தலைமை கழக பகுதியில் இரண்டு தரப்பினரும் பரபரப்பாக காணப்பட்டனர்.
தலைமை முடிவுகள் அறிவிக்கும் வரை, கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை என ஏற்கெனவே தெரிவித்த நிலையில், மீண்டும் முதல்வர் கோஷங்கள் எழுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே இரண்டு தரப்புக்குமே முதல்வர் வேட்பாளர் என்கிற எண்ணம் இருப்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது.
இன்றைய செயற்குழு கூட்டத்தில் என்ன முடிவு எடுத்தாலும், அது அதிமுகவுக்குள் அணி மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை பொறுத்து அரசியல் சூழல் மாறும் என கருதப்படுகிறது.