பிரித்தானியாவில் இரண்டாவது அலை! விதிமுறை மீறலுக்கு 13,000 டாலர் அபராதம்!
பிரித்தானியாவில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு, 13000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்.மேலும் அவர் கூறியுள்ளதாவது, “பிரிட்டன், இந்த வாரம் கொரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, கொரோனா பரவலை தடுக்க சரியான வழி விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும். தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 13,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும்” என்றுள்ளார்.
கொரோனா பரவலை தொடக்கம் முதலே அலட்சியமாகக் கையாண்டார் என்று போரிஸ் ஜான்ஸன் மீது குற்றச்சாட்டு உண்டு. அந்நாட்டில், கொரோனாவுக்கு இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் மற்றும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.